search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 10 கோவில்களில் பொங்கல் முதல் அன்னதானம்: நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவையில் 10 கோவில்களில் பொங்கல் முதல் அன்னதானம்: நாராயணசாமி அறிவிப்பு

    புதுவையில் 10 கோவில்களில் பொங்கல் முதல் அன்னதானம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் புதுவை, காரைக்கால் கோவில்களில் அன்னதான திட்டம் கொண்டுவரப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி மணக்குள விநாயகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கோவில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை அனைத்து நாட்களிலும் வழங்க முடியுமா? என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, அன்னதான திட்டத்திற்கு அரசு நிதி தராது. கோவில் நிதியை கொண்டே அன்னதான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கேற்றார்போல வாரத்தில் 2 நாட்கள் அன்னதான திட்டத்தை செயல்படுத்துங்கள். வாழை இலை போட்டு இருக்கையில் அமர்த்தி அன்னதானம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, தை மாதம் 1-ந்தேதி (பொங்கல் திருநாள்) முதல் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், குரு சித்தானந்தா கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோவில், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில், பாகூர் மூலநாதர் கோவில் ஆகிய கோவில்களில் அன்னதான திட்டத்தை தொடங்க உள்ளோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×