search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆரோன் பிஞ்ச்
    X

    ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆரோன் பிஞ்ச்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு ஆரோன் பிஞ்ச் முற்றுப்புள்ளி வைத்தார்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 6 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் வீழ்த்தவில்லை. இந்த ஆட்டத்தின் போது ஜம்பாவின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

    ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் அடிக்கடி கையை விட்டு துழாவினார். பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. சில முறை அவர் இது போல் செய்கிறார். இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.



    பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்புத்தாளை கொண்டு தேய்த்தாரா? என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கி தடையை அனுபவித்த நிலையில், ஆடம் ஜம்பாவின் செயலும் பால் டேம்பரிங் தான் என பலர் கருத்து பதிவிட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் சில வீரர்கள் விளக்கம் அளித்த பிறகுதான், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.  ஆடம் ஜம்பா பேண்ட் பாக்கெட்டில் "ஹேண்ட் வார்மர்" என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கிவிட்டு பின்னர் பந்து வீசுவார் என ஆரோன் பிஞ்ச் கூறினார். எனினும் இந்த வீடியோ தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×