search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது சீசன் ஜூலை 19-ந்தேதி தொடக்கம்: சென்னையில் இறுதிப் போட்டி
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது சீசன் ஜூலை 19-ந்தேதி தொடக்கம்: சென்னையில் இறுதிப் போட்டி

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது சீசன் ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் முதல் டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. 2017-ம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், 2018-ம் ஆண்டு மதுரை பாந்தர்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது டி.என்.பி.எல். போட்டி ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பை முடிந்த 5-வது நாளில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் போட்டி தொடங்குகிறது. ஆகஸ்டு 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. தமிழ்நாடு பிரிமியர் லீக் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற் கொள்ளப்பட்டது.



    நெல்லை, நத்தத்தில் தலா 15 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னையில் ஒரு ‘லீக்‘ ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி ஆகிய இரண்டு ஆட்டங்களே நடக்கிறது. தமிழகத்தில் உள்ள முன்னணி வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் விளையாடுவார்கள்.
    Next Story
    ×