search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி கையுறை விவகாரம்: ஐசிசி-யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது
    X

    எம்எஸ் டோனி கையுறை விவகாரம்: ஐசிசி-யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது

    உலகக்கோப்பை போட்டியில் எம்எஸ் டோனி கையுறையில் இடம் பிடித்திருந்தது ராணுவ முத்திரை விவகாரத்தில் ஐசிசி-யின் வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) உபயோகப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட லோகோவை பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தியது.

    இந்த நிலையில் ஐசிசி-யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘‘ஐசிசி-யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. விதிமுறைகளை நாங்கள் மீறமாட்டோம். நாங்கள் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேசம்’’ என்றார்.
    Next Story
    ×