search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 மணி, 13 நிமிடங்கள் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தியெம்
    X

    4 மணி, 13 நிமிடங்கள் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தியெம்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை கடும் போராட்டத்திற்குப்பின் வீழ்த்தினார் டொமினிக் தியெம்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த போட்டி நேற்று நடைபெற்றது. முதல் செட்டை தியெம் 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டை ஜோகோவிச் 6-3 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டை 7-5 என தியெம் கைப்பற்றினார். 4-வது செட்டை ஜோகோவிச் 7-5 எனக் கைப்பற்றினார். நான்கு செட்கள் முடிவில் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர்.



    வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் தியெம் அபாரமாக விளையாடினார். 3-1 என முன்னிலையில் இருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜோகோவிச் சிறப்பாக விளையாடி நெருக்கடி கொடுத்தார். என்றாலும் இறுதியில் தியெம் 7-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.

    முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி தியெம்மிற்கு நான்கு மணி, 13 நிமிடங்கள் தேவைப்பட்டது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் தியெம் நடாலை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×