
செம்மண் தரையில் ராஜாவாக திகழும் நடாலுக்கு எதிராக பெடரரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் செட்டை 6-3 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும், 4-ம் நிலை வீரரான டொமினிக் தியெமும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.