search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இன்று தொடக்கம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
    X

    மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இன்று தொடக்கம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

    மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடங்குவதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.
    பிரான்ஸ்:

    8-வது மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில்  கலை நிகழ்ச்சிகளுடன் இன்று துவங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை இத்தொடரில் சிலி, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜமைக்கா உள்ளிட்ட 4 புதிய அணிகள் களமிறங்க உள்ளன. 

    இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு துவங்க உள்ளது. இப்போட்டியில் பிரான்ஸ்- தென் கொரியா அணிகள் மோத உள்ளன. இத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 7 வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடங்குவதை குறிக்கும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. கார்ட்டூன் வடிவில் உள்ள இந்த டூடுலில் மகளிர் கால்பந்து விளையாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×