search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்டர் நைல் அதிரடியால் நிமிர்ந்தது ஆஸ்திரேலியா- 288 ரன்கள் குவிப்பு
    X

    கொல்டர் நைல் அதிரடியால் நிமிர்ந்தது ஆஸ்திரேலியா- 288 ரன்கள் குவிப்பு

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 8-வது நாளான இன்று நாட்டிங்காமில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 6 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் அடித்தார். அதேசமயம், பந்துவீச்சாளரான நாதன் கொல்டர் நைல், சரியான நேரத்தில் கைகொடுத்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர், 60 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

    48.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக பந்து வீச்சாளரான நாதன் கொல்டர் நைல் 92 ரன்களும் ஸ்டீவன் ஸ்மித் 73 ரன்களும் குவித்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கார்லோஸ் பிராத்வெயிட் 3 விக்கெட்டும், ஓஷேன் தாமஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.
    Next Story
    ×