search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகியது மிகவும் வருத்தமளிக்கிறது:கோலி
    X

    உலகக்கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகியது மிகவும் வருத்தமளிக்கிறது:கோலி

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டேயின் விலகியது வருத்தம் அளிக்கிறது என இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார். அவரது விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.



    இந்நிலையில், டேல் ஸ்டெயின் விலகல் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதுமட்டுமின்றி எனது நல்ல நண்பர். பயிற்சி போட்டியின் போது தோள்பட்டை காயம் ஏற்பட்டு உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஸ்டெயின் காயத்திலிருந்து விரைவாக குணமடைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    டேல் ஸ்டெயின் 2019, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியை தலைமையாகக் கொண்ட பெங்களூரு அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×