search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2007 உலக கோப்பையோடு ஓய்வுபெற விரும்பினேன்- சச்சின் டெண்டுல்கர்
    X

    2007 உலக கோப்பையோடு ஓய்வுபெற விரும்பினேன்- சச்சின் டெண்டுல்கர்

    கிரிக்கெட் உலகின் கடவுள் என அனைவராலும் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் 2007 உலகக் கோப்பையோடு ஓய்வு பெற விரும்பியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

    2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் பங்கேற்றது. அதில் இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணியிடம் படுதோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

    அந்த தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்திய அணியில் மாற்றங்கள் தேவை என அனைத்து தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது.  

    அந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு எடுத்திருந்தேன். ஆனால் எனது சகோதரர் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. ஆனாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கவில்லை. அப்போது எனக்கு கிரிக்கெட் ஜாம்பவானும்,மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான சர் விவி ரிச்சர்டுசனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

    அவர் என்னிடம் சுமார் 45 நிமிடங்கள் பேசினார். அப்போது நீங்கள் இந்த சூழ்நிலையில் ஓய்வு பெற வேண்டாம் எனவும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றே எனது ஓய்வு முடிவை மாற்றி கொண்டேன்.

    இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

    2007 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் மூன்று போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 2011 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்த இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×