search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது.ரெகார்ட் நமக்கே  -ரெய்னா அசத்தல் பேச்சு
    X

    இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது.'ரெகார்ட்' நமக்கே -ரெய்னா அசத்தல் பேச்சு

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானால் இந்தியாவை வீழ்த்த முடியாது எனவும், 'ரெகார்ட்' இந்தியாவிற்கே எனவும் சுரேஷ் ரெய்னா அசத்தலாக பேசியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வெஸ்ட் இண்டீசுடன் பாகிஸ்தான் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதற்கான விளக்கத்தையும் காரணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சர்பிராஸ் அகமது கூறியிருந்தார்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றவரும், இந்திய கிரிக்கெட் அணி வீரருமான சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இச்சமயத்தில் பாகிஸ்தான் போட்டியினை யாரும் சிந்தித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இப்போது நாம் தொடக்க ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தானுடன் மோதுவதற்கு முன்பாக 3 போட்டிகள் இந்தியாவிற்கு உள்ளது. அம்மூன்றையும் வென்று விட்டால் பாகிஸ்தான் பெரும்பிரச்சனையாக இருக்காது.

    மாறாக, 3 ஆட்டங்களில் சிலவற்றில் தோற்றுவிட்டால் பாகிஸ்தானுடன் மோதுவது இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், 3 ஆட்டங்களிலும் நாம் அபார வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது. உலக கோப்பை 'ரெகார்ட்' நமக்குதான்.



    இந்திய அணியில் விராட் கோலியும், மகிபாயுமே(டோனி) அதிகம் கவனிக்கப்படுவார்கள். இருவரும் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர். மேலும் உலக கோப்பையில் முக்கிய பங்கும் வகிக்கின்றனர்.

    நாம் தென் ஆப்பரிக்காவையும், இங்கிலாந்தையும் வென்றுவிட்டால், உலக கோப்பையை இந்தியா வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. என்னை பொருத்தவரை இங்கிலாந்து அணியின் பலம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வந்தப்பின்னர் அணியின் பலம் புத்துயிர் பெற்றுள்ளது.

    என்னுடைய கணிப்பின்படி, இந்தியா, இங்கிலாந்து இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்புள்ளது. ஆனால், மேற்கிந்திய தீவுகள் இருக்கும் ஃபார்மில் எந்த அணிக்கு வேண்டுமானாலும் அதிர்ச்சி அளிக்கும். ஏனென்றால் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் அங்கு அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


        





     
     
    Next Story
    ×