search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தை போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை: நாசர் ஹுசைன்
    X

    இங்கிலாந்தை போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை: நாசர் ஹுசைன்

    இங்கிலாந்து அணியின் பேட்டிங் போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் உலகக்கோப்பை போட்டி குறித்து கூறியதாவது:-

    ஒருநாள் போட்டி தர வரிசையில் இங்கிலாந்தும், இந்தியாவும் முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது இந்திய அணியிடம் இல்லை. இதே மாதிரி அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை.

    நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவர்களை பார்த்து மிரண்டு போய் இருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். தொடர்ந்து 4 ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் 300 ரன்னுக்கு மேல் அடித்து உள்ளனர்.



    ஆஸ்திரேலிய அணியுடன் முன்பு விளையாடும்போது அவர்களின் முதல் 5 விக்கெட்டை சாய்த்து விடுவோம். ஆனால் கில்கிறிஸ்ட் கடைசி வரை நின்று ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிடுவார்.

    இதேபோல தற்போது இங்கிலாந்து அணி இருக்கிறது. முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×