search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது: பிரெட் லீ
    X

    உலகக்கோப்பை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது: பிரெட் லீ

    உலகக்கோப்பை தொடர் நடக்கும் நேரத்தை பார்த்தால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினமானதாக இருக்கப் போகிறது என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். #CWC2019 #BrettLee
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரெட் லீக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா சிறந்த அணி. உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியுள்ளார். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு அணியாக இருந்தாலும், மிகவும் தயாரான நிலையில்தான் உலகக்கோப்பைக்குச் செல்லும்.

    ஆனால் இதுவெல்லாம் அவர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.



    தொடர் இங்கிலாந்தில் எந்தமாதம் நடைபெறுகிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.

    ஏராளமானோர் இங்கிலாந்து ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. புதுப்பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், பந்து பொலிவை (Shine) இழந்துவிட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×