search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலியுடன் வாக்குவாதம்: கோபத்தில் மைதான அறையின் கதவை உடைத்த நடுவர்
    X

    கோலியுடன் வாக்குவாதம்: கோபத்தில் மைதான அறையின் கதவை உடைத்த நடுவர்

    நோ-பால் விவகாரத்தில் விராட் கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த நடுவர், மைதான அறையின் கதவை எட்டு உதைத்து சிக்கலில் மாட்டியுள்ளார். #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த 4-ந்தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ‘லீக்’ போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    இப்போட்டியின் நடுவராக இங்கிலாந்தை சேர்ந்த நிகெல் லாங் செயல்பட்டார். இதில் பெங்களூர் வீரர் உமேஷ் யாதவ் வீசிய ஒரு பந்தை ‘நோ-பால்’ என்று நடுவர் நிகெல் லாங் அறிவித்தார்.

    ஆனால் டிவி ரீப்ளேயில் உமேஷ் யாதவ் கோடு மீது காலை வைத்து பந்து வீசியது தெளிவாக தெரிந்தது. இதை பார்த்து அதிருப்தியடைந்த பெங்களூர் கேப்டன் விராட் கோலி, உமேஷ் யாதவ் ஆகியோர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை நிகெல் லாங் சமாதானப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



    போட்டியின் முதல் பாதி முடிந்தபிறகு பெவிலியன் திரும்பிய நடுவர் நிகெல் லாங் ஆத்திரத்தில் மைதான அறை கதவை எட்டி உதைத்தார். இதில் கதவு சேதம் அடைந்தது. இதுபற்றி நடுவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே கதவின் சேதத்தை சரிசெய்ய ரூ.5 ஆயிரத்தை நிகெல் லாங் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கவனத்திற்கு கொண்டு செல்ல கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×