search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்கத்தில் தோற்பது முக்கியமல்ல, தொடரை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியம்: ரோகித் சர்மா
    X

    தொடக்கத்தில் தோற்பது முக்கியமல்ல, தொடரை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியம்: ரோகித் சர்மா

    ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் தோற்பது முக்கியமல்ல, தொடரை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #IPL2019 #MI #RohitShrama
    ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை வென்றுள்ளது. இந்த மூன்று முறையும் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பான தொடக்கத்தை கண்டது கிடையாது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி எழும் நிலையில், கடைசி கட்டத்தில் அபார வெற்றி பெற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி விடும்.

    இந்த சீசனிலும் முதல் 7 போட்டியில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் நடைபெற்ற 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றது. அதிலும் கடைசி நான்னில் மூன்றில் வெற்றி பெற்றது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    கொல்கத்தாவுக்கு எதிராக 48 பந்தில் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா இதுகுறித்து கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அணியாக சிறப்பாக செயல்படுவதுதான். நாங்கள் ஒரு தனிப்பட்ட வீரரை சார்ந்து இல்லை. ஏராளமான வீரர்கள் அணியின் வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் கைக்கொடுக்கிறார்கள்.



    கொல்கத்தாவுக்கு எதிராக எங்களுடைய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். ஐபிஎல் போன்ற தொடர்களில் எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் எப்போதுமே 2-வது பாதி நேரத்தில் அபாரமாக விளையாடி வருகிறோம். மூன்று முறை கோப்பையை வென்றபோது, 2-வது பாதி நேரத்தில்தான் நாங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இது ஒரு வேடிக்கையான தொடர். அவர்களுக்கு உகந்த நாளாக இருந்தால், எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்.

    கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியை காண எனது மகள் வந்திருந்தாள். நான் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் தூங்கிவிட்டாள்’’ என்றார்.
    Next Story
    ×