search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினர் வார்னர், ஸ்மித்
    X

    ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினர் வார்னர், ஸ்மித்

    தடைக்காலம் முடிந்து உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வார்னர், ஸ்மித் முதன்முறையாக களம் இறங்கி விளையாடினர். #AUSvNZ
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றனர்.

    இந்தத்தடை தற்போது முடிவடைந்தால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இன்று ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது.

    இதில் இருவரும் களம் இறங்கினர். தொடக்க வீரராக களம் இறங்கும் வார்னர், 3-வது வீரராக களம் இறங்கினார். அவர் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.



    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் ஸ்மித் ஆட்டமிழந்த பின்னர், 42 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. நாதன் கவுல்டர்-நைல் 34 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் பிஞ்ச் 52 ரன்கள் சேர்த்தார். 
    Next Story
    ×