search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட்: கவாஸ்கர் தேர்வில் வெஸ்ட் இண்டீஸ்க்கு இடம்
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட்: கவாஸ்கர் தேர்வில் வெஸ்ட் இண்டீஸ்க்கு இடம்

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என சுனில் கவாஸ்கர் ஆருடம் கூறியுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வருகிற 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்திய அணியன் முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளரும் ஆன கவாஸ்கர் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. 2015 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்தபின், அதில் இருந்து திரும்பி அபாரமான ஆட்டத்தை நான்கு வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.



    இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் அதிக அளவில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமீபகாலமாக அவர்களது ஆட்டத்தை பார்த்தீர்கள் என்றால், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த சில உலகக்கோப்பை தொடரை பார்த்தீர்கள் என்றால், போட்டியை நடத்திய நாடுதான் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதும் நடக்கலாம். இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகள் உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் மோத வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×