
இருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8-வது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும். #SunRisersHyderabad #SRH #IPL2019