search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பையில் டோனியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும்: சுனில் கவாஸ்கர்
    X

    உலகக்கோப்பையில் டோனியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும்: சுனில் கவாஸ்கர்

    சிறந்த விக்கெட் கீப்பிங் திறமையை பெற்றுள்ள டோனியின் பங்களிப்பு உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு மிகப்பெரியதாக இருக்கும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அனுபவம் வாய்ந்த எம்எஸ் டோனி களமிறங்க உள்ளார். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகப்பெரியதாக இருக்கும் என முன்னாள் கேப்டனும், தொலைக்காட்சி வர்ணனையாளரும் ஆன சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நாம் தலைசிறந்த முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வைத்துள்ளோம். ஒருவேளை அவர்கள் ஜொலிக்க தவறிவிட்டால், டோனியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும். அவர் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி இந்தியாவுக்கான பாதுகாப்பை ஸ்கோரை எடுப்பதில் மிகப்பெரிய சக்தியாக விளங்குவார்.

    நாம் டோனியின் விக்கெட் கீப்பர் திறமையை பார்த்திருப்போம். ஆனால் முக்கியமானது விஷயம், அவர் ஸ்டம்ப் அருகில் இருந்து கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வழி நடத்துவதுதான். சுழற்பந்து வீச்சாளர்களிடம் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்வது போன்ற தகவல்களை தெரிவிக்கிறார். மேலும், அதற்கேற்ப பீல்டிங்கையும் அமைக்கிறார்.



    விராட் கோலி சிறந்த பீல்டர். அவர் கடைசி நேரத்தில் லாங்-ஆஃப் அல்லது லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்வார். அப்போது சில பீல்டிங் இடங்களை அவரால் கண்காணிக்க இயலாது. அப்போது டோனி அந்த வேலையை சரியாக பார்த்துக் கொள்வார். இதனால் டோனியின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கப் போகிறது’’ என்றார்.
    Next Story
    ×