search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகிலேயே பெஸ்ட் கேப்டன் டோனிதான்- பிராவோ
    X

    உலகிலேயே பெஸ்ட் கேப்டன் டோனிதான்- பிராவோ

    உலகிலேயே பெஸ்ட் கேப்டன் டோனி தான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வெய்ன் பிரோவோ தெரிவித்துள்ளார். #CSK #Dhoni #Bravo
    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் உள்நாட்டு வீரர்களுக்கு உதவுகிறது. மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கும் பயன் அளிக்கிறது.

    உலகில் உள்ள சிறந்த பயிற்சியாளர்கள் தலைமையின் கீழ் விளையாடுகிறார்கள் இதுதான் ஐ.பி.எல். போட்டியின் சிறப்பு என கருதுகிறேன்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனுபவித்து விளையாடி வருகிறேன். மஞ்சள் நிற ஜெர்சியை அணிவது எப்போதும் சிறப்பானது. எனக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.



    டோனியின் கேப்டன்ஷிப் பற்றி என்னால் நிறைய சொல்ல முடியும். அவரது தலைமை குறித்து அனைவரும் அறிவார்கள். உலகிலேயே டோனிதான் சிறந்த கேப்டன்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த பாடகர் யார் என்றால் அது ரெய்னாதான். உலக கோப்பையை வெல்ல மற்ற அணிகளை போல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    கிறிஸ்கெய்ல், ஆந்த்ரே ரசல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #CSK #Dhoni #Bravo
    Next Story
    ×