search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து ஓபன்: 2-ம் நிலை வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் எச்எஸ் பிரனோய்
    X

    நியூசிலாந்து ஓபன்: 2-ம் நிலை வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் எச்எஸ் பிரனோய்

    நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-ம் நிலை வீரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் எச்எஸ் பிரனோய் #NewzealandOpen
    நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான எச்எஸ் பிரனோய் 2-ம் நிலை வீரரான டோமி சுகியார்ட்டோவை எதிர்கொண்டார்.

    இதில் பிரனோய் 21-14, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிரனோய்க்கு 37 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. காலிறுதியில் கான்ட்டா டிசுனேலயமாவை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு இந்திய வீரரான பி சாய் பிரனீத் 2-வது சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    Next Story
    ×