search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    37-வது அரைசதம் கோலி, காம்பீரை முந்திய ரெய்னா
    X

    37-வது அரைசதம் கோலி, காம்பீரை முந்திய ரெய்னா

    சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரெய்னா விராட் கோலி மற்றும் காம்பீரை முந்தியுள்ளார். #IPL2019 #Raina
    டெல்லி அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 37 பந்தில் 59 ரன் எடுத்தார்.

    இந்த சீசனில் அவர் 2-வது அரை சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா 37-வது அரைசதத்தை எடுத்தார். 185 இன்னிங்சில் அவர் இதை எடுத்தார்.



    இதன்மூலம் அவர் விராட் கோலி, காம்பிர் ஆகியோரை முந்தி தவானுடன் இணைந்து 2-வது இடத்தை பிடித்தார். இருவரும் தலா 36 அரைசதம் அடித்து இருந்தனர்.
    Next Story
    ×