search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்
    X

    ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார் ஸ்மித்

    12-வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்மித் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா முகாமுக்குச் செல்வதால் அணியில் இருந்து பிரியா விடைபெற்றார். #IPL2019 #RR
    ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

    இந்த தடை முடிந்து பல டி20 தொடரில் விளையாடி வந்தநிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பைக்கான முகாமை வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்ப வலியுறுத்தியது.
     
    இதனையடுத்து உலக கோப்பை அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா அணி வீரர் ஜேசன் பெரேண்டர்ப் சொந்த நாட்டுக்கு திரும்பிய நிலையில் ஸ்மித்-ம் சொந்த நாட்டுக்கு திரும்பினார். பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம் தான் ஸ்மித்-க்கு கடைசி ஆட்டமாக இருந்தது. இவர் ராஜஸ்தான் அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடி 3 அரை சதங்கள் உள்பட 319 ரன்கள் அடித்துள்ளார். இவரது சராசரி 39.87 ஆகும்.

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் 8 போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியது. இதனையடுத்து அடுத்த 5 போட்டியில் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு 3 போட்டிகளில் அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

    இந்நிலையில் நாடு திரும்பும் ஸ்மித் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி, இந்த ஐபிஎல் சீசனில் நான் பங்கேற்றிருந்த கடந்த 7 வாரமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பல நல்ல மனிதர்களின் நட்பும் கிடைத்தது என்று கூறிய ஸ்மித் டெல்லி அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். #IPL2019 #RR
    Next Story
    ×