search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் ஆட்டம் பாதியில் ரத்து - ராஜஸ்தான் அணியின் ‘பிளேஆப்’ வாய்ப்பு பாதிப்பு
    X

    மழையால் ஆட்டம் பாதியில் ரத்து - ராஜஸ்தான் அணியின் ‘பிளேஆப்’ வாய்ப்பு பாதிப்பு

    பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இரு அணிக்களுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டதால் ராஜஸ்தான் அணியின் பிளேஆப் வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. #ShreyasGopal #IPL2019 #RCBvsRR
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 2 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்னும் 2 அணிகள் தகுதி பெற வேண்டியுள்ளது.

    பெங்களூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. மழையால் இந்த ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் விளையாடிய பெங்களூர் அணி 5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

    இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. அந்த அணி 10 பந்தில் 22 ரன் தேவை என்று இருந்தபோது ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் 2 புள்ளிகளை பெற முடியாமல் 1 புள்ளியை மட்டுமே ராஜஸ்தான் பெற்றது. இதனால் அந்த அணியின் ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணி நேற்றைய போட்டியின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 7 ஆட்டங்ளே எஞ்சியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞசாப் ஆகிய 5 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கான போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தான் அணி தகுதி பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். அந்த அணி 11 புள்ளிகளுடன் உள்ளது.

    ராஜஸ்தான் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் டெல்லியை 4-ந்தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே இருக்கிறது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி ஒரு ஆட்டத்தில் வென்றாலே தகுதி பெற்றுவிடும். 4-வது அணியாக தகுதி பெறுவதில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளிடையே போட்டி நிலவுகிறது. #IPL2019 #RCBvsRR
    Next Story
    ×