search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுவர் அவுட் கொடுத்ததால் பேட்டால் ஸ்டம்பை தாக்கிய ஹிட்மேனுக்கு 15 சதவீதம் அபராதம்
    X

    நடுவர் அவுட் கொடுத்ததால் பேட்டால் ஸ்டம்பை தாக்கிய ஹிட்மேனுக்கு 15 சதவீதம் அபராதம்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக அம்பயர் எல்பிடபிள்யூ கொடுத்ததால், கோபத்தில் ஸ்டம்பை பேட்டால் தாக்கிய ரோகித் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #RohitSharma
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 232 ரன்கள் குவித்தது.

    பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது, டி காக் டக்அவுட் ஆனார். மறுமுனையில் 9 பந்தில் 12 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, கேரி கர்னி வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட போது, பந்து அவரது காலை தாக்கியது.

    இதனால் கொல்கத்தா வீரர்கள் எல்பிடபிள்யூ அவுட்டுக்கு அப்பீல் கேட்டனர். நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் ரோகித் சர்மா ‘ரிவியூ’ கேட்டார். ரிவியூ-வில பந்து லெக் ஸ்டம்பை லேசாக தாக்கிவிட்டு சென்றது. ‘அம்பயர்ஸ் ஹால்’ முடிவு மூலம் 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    மெயின் அம்பயர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் ரோகித் சர்மாவுக்கு சாதகமாக இருந்திருக்கும். இதனால் கோபம் அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டு வந்தார். நடுவர் அருகில் வந்தபோது கோபத்துடன் ஸ்டம்பை பேட்டால் தாக்கினார்.

    இதுகுறித்து நடுவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ரோகித் சர்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் ஐபிஎல் வீரர்களின் நன்னடத்தையை மீறியதாக போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×