search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்துடன் இன்று மோதல் ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலடி கொடுக்குமா?
    X

    ஐதராபாத்துடன் இன்று மோதல் ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலடி கொடுக்குமா?

    ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. #ipl2019 #rrvssrh

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 45-வது ‘லீக்’ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    அந்த அணி ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் ரகானே (352 ரன்), கேப்டன் சுமித் (297 ரன்), சஞ்சு சாம்சன் (261 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் ஷிரேயாஸ் கோபாலும் (13 விக்கெட்), நல்ல நிலையில் உள்ளனர். பட்லர், பென்ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இங்கிலாந்து திரும்பி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பே.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால் அந்த அணியை மீண்டும் தோற்கடித்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் ஐதராபாத் அணி உள்ளது.

    அந்த அணியின் பேட்டிங்கில் வார்னர் (574 ரன்), பேர்ஸ்டோவ் (445) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பேர்ஸ்டோவ் நாடு திரும்பியது பேட்டிங்கில் பலவீனத்தை காட்டும்.

    ஏற்கனவே அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருக்கிறது. பந்துவீச்சில் ரஷீத்கான், சந்தீப் சர்மா (தலா 10 விக்கெட்), தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #ipl2019 #rrvssrh 

    Next Story
    ×