search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைதான் முக்கியம்: முதுகு வலி கடுமையானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன்: எம்எஸ் டோனி
    X

    உலகக்கோப்பைதான் முக்கியம்: முதுகு வலி கடுமையானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன்: எம்எஸ் டோனி

    உலகக்கோப்பைதான் முக்கியம். முதுகு வலி மிகவும் மோசமானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். #MSDhoni #CSK #IPL2019
    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருபவர் எம்எஸ் டோனி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவருக்கு நீண்ட காலமாக முதுகு வலி இருந்து வருகிறது. ஆனால் அந்த வலி தீவிரமடையாத வகையில் விளையாடி வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக முதுகு வலி காரணமாக களம் இறங்கவில்லை. இதனால் டோனியின் முதுகு வலி வீரியம் அடைந்து விட்டதோ? என ரசிகர்கள் கவலையடைந்தனர்.

    அதன்பிறகு ஆர்சிபி அணிக்கெதிராக களம் இறங்கி 48 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கவில்லை. இதனால் மீண்டும் காயம் குறித்த கவலை ஏற்பட்டது.



    இந்நிலையில் காயம் வீரியம் அடைந்தால் ஓய்வு எடுத்துக் கொள்வேன். உலகக்கோப்பைதான் முக்கியம் என்று டோனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டோனி கூறுகையில் ‘‘முகுது வலி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மிகவும் மோசமான நிலைக்குச் செல்லவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருவதால், அதுகுறித்து கவனம் எனது மனதில் உள்ளது. உலகக்கோப்பைதான் முக்கியம் என்பதால் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். முதுகு வலி மிகவும் மோசமானால், உறுதியாக ஓய்வு எடுத்துக் கொள்வேன்’’ என்றார்.
    Next Story
    ×