search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு
    X

    டோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு

    வேறு எந்த அணியாக இருந்தாலும் என்னை நீக்கியிருக்கும், டோனி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று வாட்சன் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். #IPL2019 #CSK #Watson
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் முதல் அணியாக ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    175 ரன்னை சேஸிங் செய்யும்போது தொடக்க பேட்ஸ்மேன் வாட்சன் வாட்சன் அதிரடியாக விளையாடி 53 பந்தில் 96 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

    இந்த ஆட்டத்திற்கு முன் பெங்களூர் (5), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (31), கொல்கத்தா (6 2-வது ஆட்டம்), ராஜஸ்தான் (0), கொல்கத்தா (17 முதல் ஆட்டம்), பஞ்சாப் (26) சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதனால் அவர் மீது விமர்சன் எழுந்தது. அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.



    ஆனால், சென்னை அணி கேப்டன் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். இதனால் டோனி இல்லை என்றால் அணியில் இடம் பிடித்திருக்கமாட்டேன் என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாட்சன் கூறுகையில் ‘‘ஸ்டீபன் பிளெமிங் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மோதுமான அளவிற்கு நன்றி கூற இயலாது. நான் ஏராளமான அணியில் விளையாடியுள்ளேன். நான் கட்டாயம் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பேன். ஆனால், அவர்கள் என்மீது நம்பிக்கையை காண்பித்துவிட்டார்கள்’’ என்றார்.
    Next Story
    ×