search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்
    X

    டி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்

    ஸ்காட்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பேட்ஸ்மேன் ஒருவர் 25 பந்தில் சதம் விளாசினார். அவர் இடம் பெற்ற அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
    ஸ்காட்லாந்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற டி20 போட்டி ஒன்றில் குளோவ்செஸ்டர்ஷைர் 2-வது லெவன் - பாத் சிசி முதல் லெவன் அணிகளும் மோதின. இதில் குளோவ்செஸ்டர்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரரான ஜார்ஜ் முன்சே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் சதத்தை எட்டினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 147 ரன்கள் குவித்தார். இதில் 20 சிக்சர்கள், ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இவர் களம் இறங்கிய மற்றொரு தொடக்க வீரர் ஜிபி வில்லோவ்ஸ் 59 பந்தில் 115 ரன்கள் குவி்தார். இதனால் குளோவ்செஸ்டர்ஷைர் 3 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய பாத் சிசி அணி 214 ரன்களே எடுத்தது.

    டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அயர்லாந்துக்கு எதிராக 278 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
    Next Story
    ×