search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்
    X

    தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்

    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்ததால் மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் ஹென்ரிக்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் #IPL2019 #MI
    மும்பை இந்தியன்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மில்னே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அல்ஜாரி ஜோசப்பை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    அறிமுக போட்டியிலேயே 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் இரண்டு ஆட்டங்களில் விளையாடி அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.



    இந்நிலையில் தற்போது அல்ஜாரி ஜோசப்பிற்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் பியரன் ஹென்ரிக்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரேண்டர்ப், மலிங்கா போன்றோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×