search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
    X

    நான்கு நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #MI
    உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடரின் 12-சீசன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. அதன்பின் மே 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் 24-ந்தேதி பயிற்சி ஆட்டங்கள் தொடங்குகிறது.

    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் இடையில் 12 நாட்களே இடைவெளி இருப்பதால் வீரர்கள் ‘ஒர்க் லோடு’ குறித்த விவாதம் எழும்பியது. அப்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் எங்களது வீரர்களுக்கு நாங்கள் போதுமான ஓய்வு அளிப்போம் என்று தெரிவித்தது.

    மும்பை அணி நேற்று முன்தினம் சனிக்கிழமை (20-ந்தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியது. அடுத்த போட்டியில் 26-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு போட்டிக்குமிடையில் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது.



    இந்த குறுகிய இடைவெளியை வீரர்களுக்கு ஓய்வாக அளித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த நாட்களில் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, டி காக், மலிங்கா போன்ற வீரர்களை அணியில் இருந்து ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாமல் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    அதன்பின் சென்னை அணிக்கெதிராக விளையாட ஒன்றிணைவார்கள். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×