search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானுடன் இன்று மோதல் - டெல்லி அணி 7-வது வெற்றியை பெறுமா?
    X

    ராஜஸ்தானுடன் இன்று மோதல் - டெல்லி அணி 7-வது வெற்றியை பெறுமா?

    ஐபிஎல் போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #IPL2019 #RR #DC
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை இந்தியன்சை 2 முறை (4 விக்கெட், 5 விக்கெட்), பெங்களூர் அணியை 1 தடவை (7 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. பஞ்சாப் (14 ரன், 12 ரன்), சென்னை (8 ரன், 4 விக்கெட்), அணிகளிடம் தலா 2 முறையும் ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தலா 1 தடவையும் தோற்றது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ராஜஸ்தான் அணிக்கு உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே மாற்றப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    பேட்டிங்கில் பட்லர் (311 ரன்), சுமித் (245 ரன்), சாம்சன் (234) ஆகியோரும், பந்து வீச்சில் ஆர்ச்சர் (11 விக்கெட்), ஷிரேயாஸ் கோபால் (10 விக்கெட்)ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

    அந்த அணி கொல்கத்தாவை 2 முறையும் (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), மும்பை (37 ரன்), பெங்களூரு (4 விக்கெட்), ஐதராபாத் (39 ரன்), பஞ்சாப் (5 விக்கெட்) ஆகியவற்றை ஒருமுறையும் வீழ்த்தியது.

    சென்னை ( 6 விக்கெட்), பஞ்சாப் (14 ரன்), ஐதராபாத் (5 விக்கெட்), மும்பை (40 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.

    ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை டெல்லி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியில் தவான் (347 ரன்), கேப்டன் ஹிரேயாஸ் அய்யர் (327 ரன்), ரி‌ஷப்பந்த் (258 ரன்), ரபடா (21 விக்கெட்), கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #IPL2019 #RR #DC
    Next Story
    ×