search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #SRHvCSK

    ஐதராபாத்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர்.


    ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் ரெய்னா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்குக்கு ஒரு அணி முன்னுரிமை கொடுப்பது இது 4-வது முறையாகும்.

    இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான அடித்தளம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (9.5 ஓவர்) திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400-வது சிக்சராக பதிவானது. வாட்சன் 31 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.




    சென்னை அணி எப்படியும் 160 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. பிளிஸ்சிஸ் 45 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் கொடுத்த குடைச்சலில் சென்னை அணி தடம் புரண்டது. அவர், பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா (13 ரன்), கேதர் ஜாதவ் (1 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். இதனால் ரன்வேகம் ஒரேயடியாக மந்தமானது. அடுத்து வந்த சாம் பில்லிங்சும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரண்டு முறை மட்டுமே எல்லைக்கோடு பக்கம் சென்றது.

    20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் பின்னியெடுத்தார். 24 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை எட்டிய அவர் 50 ரன்களில் (25 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்), விஜய் சங்கர் (7 ரன்), தீபக் ஹூடா (13 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ரன்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்.



     #IPL2019 #IPL2019 #SRHvCSK
    Next Story
    ×