search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்: யுவான்டஸை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறியது அஜாக்ஸ்
    X

    யூரோ சாம்பியன்ஸ் லீக்: யுவான்டஸை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறியது அஜாக்ஸ்

    கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய யுவான்டஸை 2-1 என வீழ்த்தி அஜாக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. #UCL
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

    2018-19 சீசனுக்கான காலிறுதி ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், தங்களுடைய எதிரணியுடன் சொந்த மைதானம் மற்றும் எதிரி மைதானம் என தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.

    ஒரு காலிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் (இத்தாலி) - அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஜாக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.



    2-வது லெக் யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 28-வது நிமிடத்தில் யுவான்டஸின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் பதில் கோல் அடித்தார். இதனால் 2-வது முதல் பாதி நேரம் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் கோல் அடிக்க அஜாக்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் யுவான்டஸ் அணி போராடியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அஜாக்ஸ் இரண்டு லெக்கிலும் சேர்த்து யுவான்டஸை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×