search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வான்கடே மைதானத்தில் இன்று மோதல் - மும்பை இந்தியன்சை பெங்களூர் பழி தீர்க்குமா?
    X

    வான்கடே மைதானத்தில் இன்று மோதல் - மும்பை இந்தியன்சை பெங்களூர் பழி தீர்க்குமா?

    வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். #MIvsRCB #IPL2019
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 31-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர் (6 ரன்), சென்னை (37 ரன்), ஐதராபாத் (40 ரன்), பஞ்சாப் (3 விக்கெட்) ஆகியவற்றை வென்று இருந்தது. டெல்லி (37 ரன்), பஞ்சாப் (8 விக்கெட்), ராஜஸ்தான் (4 விக்கெட்) ஆகிய அணியிடம் தோற்றது.

    பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக் (238 ரன்), பொல்லார்ட் (185 ரன்), கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), அல்ஜாரி ஜோசப் (6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பாண்டியா சகோதரர்கள் ஆல்ரவுண்டு வரிசையில் ஜொலிக்க கூடியவர்கள்.

    பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் (சென்னை, மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி) தோல்வியை சந்தித்தது. பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. 1 வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    சொந்த மண்ணில் மும்பையிடம் 6 ரன்னில் தோற்றதற்கு பழிதீர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி இருக்கிறது.

    சொந்த மண்ணில் அந்த அணி வெற்றி அருகே வந்து வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டத்தின் போது நடுவரின் செயல் பெங்களூருக்கு பாதகமாக இருந்தது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் வெற்றியை பெற கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். கோலி இரண்டு அரை சதத்துடன் 270 ரன்னும், டிவில்லியர்ஸ் 232 ரன்னும் (3 அரை சதம்) எடுத்துள்ளனர். பார்த்தீவ் பட்டேல் 191 ரன் எடுத்து உள்ளார்.

    சுழற்பந்து வீரர் யசுவேந்திர சஹாலை மட்டுமே அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. அவர் 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஸ்டோனிஸ் ஆல் ரவுண்டர் வரிசையில் கை கொடுக்க கூடியவர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #MIvsRCB
    Next Story
    ×