search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ் ரெய்னா, தாஹிர் அபாரம் - கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி
    X

    சுரேஷ் ரெய்னா, தாஹிர் அபாரம் - கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி

    கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா, தாஹிரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. #IPL2019 #CSKvKKR
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

    சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.



    சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

    டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். #IPL2019 #CSKvKKR
    Next Story
    ×