search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானுடன் இன்று மீண்டும் மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நீடிக்குமா?
    X

    ராஜஸ்தானுடன் இன்று மீண்டும் மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நீடிக்குமா?

    ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #CSKvRR
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 25-வது ‘லீக்’ ஆட்டம் ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    சேப்பாக்கத்தில் நடந்த 4 ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிடல்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. மும்பையிடம் வான்கடே மைதானத்தில் தோற்றது.

    சென்னையில் நடந்த போட்டியில் 8 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். சூப்பர் கிங்சின் அதிரடி இன்றும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் (9 விக்கெட்), ஹர்பஜன்சிங் (7), ரவிந்திர ஜடேஜா (5) ஆகிய 3 பேரும் சேர்ந்து 21 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். சேப்பாக்கத்தில் சாதித்த இவர்கள் வெளியூரிலும் முத்திரை பதிப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் (8 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளார்.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, ரெய்னா, கேதர் ஜாதவ், டுபெலிசிஸ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். வாட்சன், அம்பதிராயுடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமானது.

    பிராவோ காயம் அடைந்து இருப்பது அணிக்கு பாதிப்பே. அவர் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களில் தொடர்ந்து 3 பேரை வைத்து ஆடும் மனப்பான்மையில் டோனி இருக்கிறார்.

    2-வது ஹாட்ரிக் வெற்றியை சூப்பர் கிங்ஸ் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. சென்னையிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் பட்லர் (176 ரன்), சுமித் (159 ரன்), கேப்டன் ரகானே (124 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் ஷிரேயாஸ் கோபால் (8 விக்கெட்), பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    சேப்பாக்கத்தில் அந்த அணி சூப்பர் கிங்சிடம் வெற்றி அருகே வந்து வாய்ப்பை தவறவிட்டது. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் சென்னையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும்.  #IPL2019 #CSKvRR
    Next Story
    ×