search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் அணி ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை - அஸ்வின்
    X

    பஞ்சாப் அணி ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை - அஸ்வின்

    ஐதராபாத் அணியுடனான பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த ஆறுதலை அளிப்பதாகவும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை எனவும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்துள்ளார். #Ashwin #KXIPvSRH
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. வார்னர் அதிகபட்சமாக 62 பந்தில் 70 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 53 பந்தில் 71 ரன் எடுத்து (7 பவுண்டரி, 1 சிக்சர்) வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மயங் அகர்வால் 43 பந்தில் 55 ரன் எடுத்தும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) உதவியாக இருந்தார்.

    பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது. உள்ளூர் மைதானமான மொகாலியில் அந்த அணியின் அதிரடி நீடிக்கிறது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    பரபரப்பான ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ஆனாலும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை.

    கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை கொடுத்தது உண்மையிலேயே கடுமையானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறும்போது, “எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் கடைசி வரை போராடினோம்” என்றார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற லோகேஷ் ராகுல் கூறும்போது , “எனது பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கையில் காயத்துடன் அகர்வால் விளையாடுவது பாராட்டுதலுக்கு உரியது” என்றார்.

    பஞ்சாப் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் நாளை மோதுகிறது, ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 14-ந்தேதி எதிர் கொள்கிறது. #Ashwin #KXIPvSRH
    Next Story
    ×