search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் போட்டியின்போது வழக்கத்திற்கு மாறாக டென்ஷன் ஆன ‘கூல்’ டோனி
    X

    பஞ்சாப் போட்டியின்போது வழக்கத்திற்கு மாறாக டென்ஷன் ஆன ‘கூல்’ டோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி பொதுவாக டென்ஷன் ஆகமாட்டார். ஆனால் பஞ்சாப் அணிக்கெதிராக தீபக் சாஹர் அவரை டென்ஷனாக்கிவிட்டார். #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சர்பிராஸ் அகமது, லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தனர்.

    ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகியோர் ரன்னைக் கட்டுப்படுத்த, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 39 ரன்கள் என்ற நிலையில் 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார்.

    முதல் பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ‘ஸ்லோ’வாக வீச நினைத்த சாஹர், அதை புல்டாசாக வீசிவிட்டார். நடுவர் ‘நோ-பால்’ என அறிவிக்க, சர்பராஸ் கான் அதை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தையும் அதே மாதிரியே வீசினார். அதில் இரண்டு ரன் அடித்தார் சர்பராஸ். பந்து ஏதும் வீசப்படாமல் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.

    இதனால் டோனி டென்சன் ஆனார். தீபக் சாஹரிடம் வந்து நீண்ட நேரம் ஆலோசனை வழங்கினார். பின்னர் சாஹர் சிறப்பாக பந்து வீசி கடைசி பந்தில் டேவிட் மில்லரை க்ளீன் போல்டாக்கினார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வழக்கமாக எந்தவொரு நெருக்கடியான நேரத்திலும் எம்எஸ் டோனி எமோசனாக மாட்டார். ஆனால் நேற்று டென்ஷன் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.
    Next Story
    ×