search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்ட் பிராவோ 2 வாரம் விளையாடமாட்டார்: சிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு
    X

    ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்ட் பிராவோ 2 வாரம் விளையாடமாட்டார்: சிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளரான பிராவோ காயத்தால் இரண்டு வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ இடம்பிடித்து விளையாடி வருகிறார். சென்னை அணியில் ‘டெத் ஓவர்கள்’ வீசுவதில் வல்வராக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது, இவருக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring)  காயம் ஏற்பட்டது.

    இதனால் நாளைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு முதல் நிலை ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.



    சென்னை நாளைக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 9-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸையும், 11-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 14-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடசர்ஸ் அணியையும், 17-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×