search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏதாவது செய்வேன்: சாம் குர்ரான்
    X

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏதாவது செய்வேன்: சாம் குர்ரான்

    ஐபிஎல் ஆட்டத்தின் 2-வது போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரான், பஞ்சாப் அணிக்கு சிறப்பான முறையில் ஏதாவது செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாம் குர்ரான். 20 வயதே ஆகும் அவர் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்தது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதன்முதலாக அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் நான்கு ஓவரில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரண்டு போட்டியில சாம் குர்ரான் நீக்கப்பட்டார்.

    அதன்பின் டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்லுக்குப் பதில் சாம் குர்ரான் களம் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய குர்ரான் 10 பந்தில் 20 ரன்கள் அடித்தார். அத்துடன் 2.2 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இரண்டு போட்டிகளிலேயே புகழைப் பெற்ற குர்ரான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏதாவது செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாம் குர்ரான் கூறுகையில் ‘‘மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கிடையில் விளையாட கற்றுக் கொள்வது முக்கியமானது. மாறுபட்ட இடத்தில் மாறுபட்ட நிலையில் ஆடுகளங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நான் விளையாடுவது இது முதல் முறை. ஆகவே வெயிலின் தாக்கம் மிகவும் சவாலாக உள்ளது. சில விஷயங்களை தலைசிறந்த வீரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்து இங்கிலாந்து சீசனுக்கு சில விஷயங்களை எடுத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    ரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்த தொடரில் விளையாட வரும்போது சில விஷயங்களை எதிர்பார்த்து வந்தேன். ஆட்ட நாயகன் விருது பெற்றதில் சந்தோசம். ஆனால், கற்றுக் கொண்டு, கிரிக்கெட்டில் தொடர்ந்த வளர வேண்டும் என்பது என் நோக்கம்’’ என்றார்.
    Next Story
    ×