search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் அணியை சமாளிக்குமா டெல்லி - இன்று பலப்பரீட்சை
    X

    ஐதராபாத் அணியை சமாளிக்குமா டெல்லி - இன்று பலப்பரீட்சை

    ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லியில் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. #IPL2019 #DCvsSRH
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியின் 16-வது ‘லீக்’ ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மும்பை இந்தியன்சை 37 ரன்னிலும், கொல்கத்தா நைட் ரைடர்சை சூப்பர் ஓவரிலும் வென்றது. சென்னை சூப்பர் கிங்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 14 ரன்னிலும் தோற்றது.

    முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட்டில் தோற்றது. அதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்சை 5 விக்கெட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 118 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பதால் 3-வது வெற்றி யாருக்கு? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி பஞ்சாப்புக்கு எதிராக வெற்றியை கோட்டைவிட்டது. அந்த அணி 8 ரன்னில் 7 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப தோல்வியை தழுவியது. அது மாதிரியான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் டெல்லி அணி கவனத்துடன் செயல்படும்.

    அந்த அணியில் ரிசப்பந்த், பிரித்விஷா, கேப்டன் ஷிரேயாஸ் அய்யர், காலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஐதராபாத்தின் அதிரடியை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலானதே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகமானது.

    அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்ற ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறும் ஆர்வத்துடன் உள்ளது. ஐதராபாத் தான் விளையாடிய 3 ஆட்டத்திலும் மிகப்பெரிய ரன்களை குவித்து இருந்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், 2 அரை சதத்துடன் 254 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

    ஐதராபாத்தின் மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 198 ரன்னுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். இதுதவிர யூசுப் பதான், விஜய்சங்கர், மனிஷ் பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். #IPL2019 #DCvsSRH
    Next Story
    ×