search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியா ஓபன்: ஸ்ரீகாந்த், பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    மலேசியா ஓபன்: ஸ்ரீகாந்த், பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிவி சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், எச்.எஸ். பிரனோய் தோல்வியடைந்தார்.
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த மவுலானா முஸ்தபாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-18, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 22-20, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் பிவி சிந்து 7-12, 16-19 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 22-20 என வெற்றி பெற்றார்.

    எச்.எஸ். பிரனோய் தாய்லாந்து வீரர் சித்திகோம் தம்மாசின் இடம் 21-12, 16-21, 1-21 என தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
    Next Story
    ×