search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும்: தோல்வி குறித்து கோலி கருத்து
    X

    15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும்: தோல்வி குறித்து கோலி கருத்து

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கூடுதலாக 15 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #IPL2019 #RRvRCB
    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டில் பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. பார்த்தீவ் பட்டேல் 41 பந்தில் 67 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 28 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), மொயீன்அலி 9 பந்தில் 18 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஷ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 43 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) சுமித் 31 பந்தில் 38 ரன்னும், திரிபாதி 23 பந்தில் 34 ரன்னும் எடுத்தனர். பெங்களூர் அணி தொடர்ந்து 4-வது தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வி குறித்து அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    முந்தைய ஆட்டத்தைவிட இதில் நாங்கள் சவாலாகவே திகழ்ந்தோம். ஆனால் 15 முதல் 20 ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். 160 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் இன்னும் சவாலாக இருந்து இருக்கும்.

    இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியை அடைந்த நாங்கள் அடுத்த ஒரிரு போட்டிக்குள் வெற்றிப்பாதைக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணி சம பலத்துடன்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முதல் வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறும்போது, “வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது” என்றார்.
    Next Story
    ×