search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்சிபி வீரர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்- டி வில்லியர்ஸ்
    X

    ஆர்சிபி வீரர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்- டி வில்லியர்ஸ்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான படுதோல்வியால் நாங்கள் மிகவும் துவண்டு விட்டோம். பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #IPL2019 #DeVilliers
    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது.

    இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தபின்னர், ஓட்டலுக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன். அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

    நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம். மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளோம். மூன்றிலும் தோல்வி. மற்றொரு மோசமாக சீசனாக அமைந்துவிடுமோ என்று எங்கள் அணி ரசிகர்கள் கருதுகிறார்கள்.



    இன்னும் 11 லீக் ஆட்டங்கள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றின்படி 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அல்லது குறைந்த பட்சம் 7 போட்டிகளிலாவது வெற்றிபெற வேண்டும். ஆர்சிபி உடனடியாக வெற்றிக்கு திரும்ப வேண்டுமென்றாலே, ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

    எங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. ஆனால், பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையான போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.’’ என்றார்.
    Next Story
    ×