search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் அணியில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்: ஆரோன் பிஞ்ச் கவலை
    X

    எங்கள் அணியில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்: ஆரோன் பிஞ்ச் கவலை

    ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பியதால் எங்கள் அணியில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஓராண்டு தடையில் இருந்ததால், அந்த அணி ஒருநாள் போட்டியில் மிகவும் தடுமாறியது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் காயத்தால் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

    இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி திணறிக்கொண்டிருந்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்குவதால் ஆஸ்திரேலியா அணி குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கவலை தெரிவித்தனர்.

    இந்நிலையில்தான் ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்தது.

    அதன்பின் விஸ்வரூபம் எடுத்து ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அசத்தியது. இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இந்த நேரத்தில்தான் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்த மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

    இதனால் இந்தியா, பாகிஸ்தான் தொடரில் விளையாடிய சில வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.

    இந்நிலையில், எங்கள் அணியில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிஞ்ச் கூறுகையில் ‘‘எங்கள் அணியில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருக்கப் போகிறார்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க விரும்புவார்கள்.

    ஆனால், கடினமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்காக இதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரசிகர்கள் எங்களை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார்கள்’’ என்றார்.
    Next Story
    ×