search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னரால் மிகவும் பெருமையடைகிறேன்: அவரது மனைவி கேண்டிஸ் உருக்கமான ட்வீட்
    X

    வார்னரால் மிகவும் பெருமையடைகிறேன்: அவரது மனைவி கேண்டிஸ் உருக்கமான ட்வீட்

    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வார்னரால் மிகவும் பெருமையடைகிறேன் என அவரது மனைவி ட்விட்டரில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைப்பெற்றார். இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை.

    தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இரண்டு போட்டியிலும் அரைசதம் அடித்த வார்னர், ஆர்சிபி-க்கு எதிரான 3-வது போட்டியில் சதம் விளாசினார்.

    இந்நிலையில் தடைக்குப்பின் மிகப்பெரிய தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வார்னரால், மிகவும் பெருமையடைகிறேன் என அவரது மனைவி கேண்டிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×