search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது போட்டியிலும் வெற்றி - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா
    X

    5-வது போட்டியிலும் வெற்றி - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

    5-வது ஒருநாள் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அணி ஒயிட்வாஷ் செய்தது. #PAKvsAUS
    துபாய்:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 98 ரன்னும், மேக்ஸ்வெல் 33 பந்தில் 70 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஷான் மார்ஷ் 61 ரன்னும் எடுத்தனர். உஸ்மான் சின்வாரி 4 விக்கெட்டும், ஜூனைத்கான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்தது. இதனால் இந்த அணி 20 ரன்னில் தோல்வியை தழுவியது.

    பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சொகைல் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 130 ரன்னும், தொடக்க வீரர் மசூத், இமாத் வாசிக் தலா 50 ரன்னும் எடுத்தனர். பெகரன் டார்ப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. ஆஸ்திரேலியா 5 ஆட்டத்திலும் வெற்றுபெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. #PAKvsAUS
    Next Story
    ×