search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்லான் ஷா ஹாக்கி: போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் பந்தாடி வீழ்த்தியது இந்தியா
    X

    அஸ்லான் ஷா ஹாக்கி: போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் பந்தாடி வீழ்த்தியது இந்தியா

    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

    வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
    Next Story
    ×