search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்புயல்கள் லுங்கி நிகிடி, அன்ரிச் நோட்ஜ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
    X

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்புயல்கள் லுங்கி நிகிடி, அன்ரிச் நோட்ஜ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி, அன்ரிச் நோட்ஜ் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். #IPL2019
    ஐபிஎல் 12-வது சீசன் நாளைமறுநாள் (23-ந்தேதி) தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே உள்ளதால் 8 அணிகளும் ஆடும் லெவன் அணியைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி இடம்பிடித்திருந்தார். முக்கியமான போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    தற்போது இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். ஐந்தாவது போட்டியின்போது இவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர் விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சை இழந்துள்ளது.

    மற்றொரு வீரரான அன்ரிச் நோட்ஜ்-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2019 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது. இவர் இலங்கை தொடரில் அறிமுகமானார். இலங்கை தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோள்பட்டை காயத்தால் 6 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். இந்நிலையில் அன்ரிச் விலகியிருப்பது கொல்கத்தா அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×